சோயா விழுது (Soybean paste), தவ்வு (tofu) முதலிய சோயா மொச்சை உணவு வகைகள் இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும் எனப் புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கருப்பு மொச்சைப் பயறு நாம் அதிகமாகப் பயன்படுத்துவ தில்லை. ஆனால் அதில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் மிகக் குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிக அளவிலான நார்ச்சத்தும் இருக்கிறது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் காலை உணவாக இந்த கருப்பு பீன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் மற்ற கார்போ உணவுகளை விட, குறிப்பாக பிரட். அரிசி உணவுகளுடன் ஒப்பிடும் போது இந்த கருப்பு மொச்சை மிகவும் சிறந்தது.
சரி இனி சோயா பயன்படுத்தி டேஸ்டியான சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி?என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்.:
சோயா - 100 கிராம்,
மொச்சை - 100 கிராம்,
தக்காளி - 2,
மிளகாய் வற்றல் - 2,
தனியா - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 2 பல்,
தயிர் - 2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை.:
சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.
குறிப்பு.:
சோயா மொச்சையுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது. சோயாபீன்ஸ் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும்.
மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.
குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
சோயா பீன்ஸ் ஆனது சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட வகைகளாக உண்ணப் படுகிறது.
உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம். ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது.
மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.