சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?





சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?
இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. 

பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். 

ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். 
உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது கல்லீரல். நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. 

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரு வகைகள் உள்ளன. 

பூண்டு உணவில் சேர்க்கப்படுவதால், (எல்.டி.எல்) கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். 
பூண்டு சேர்த்துக் கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.

தேவையான பொருட்கள் :

வேக வைத்த முட்டை – 2

பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

கிராம்பு, பூண்டு – 2

உப்பு – சுவைக்கேற்ப

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 1

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
சில்லி முட்டை மசாலா
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். 

அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.
சில்லி முட்டை மசாலா ரெடி! சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்
Tags: