மசாலா காபி என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பானமாகும். இது காபி, பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் இஞ்சி போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களால் தயாரிக்கப் படுகிறது.
மசாலா காபியில் உள்ள மசாலாப் பொருட்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவை வறுக்கப்பட்டு ஒன்றாக அரைக்கப்பட்டு பின்னர் காபியில் சேர்க்கப் படுகின்றன. மசாலா காபி பொதுவாக சூடாக பரிமாறப் படுகிறது.
மசாலா காபியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஏலக்காய், இஞ்சி மற்றும் கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் செரிமானம் மற்றும் வயிற்று அசௌகரியத்தை எளிதாக்க உதவும் செரிமான பண்புகளைக் கொண்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட மசாலாப் பொருட்களில் இஞ்சி மற்றும் கருப்பு மிளகு அடங்கும்.
தேவையான பொருள்கள்
சுக்கு - 50 கிராம்
திப்பிலி. 50 கிராம்
மிளகு 50 கிராம்
கொத்தமல்லி. 50 கிராம்
சீரகம் 50 கிராம்
சோம்பு. 50 கிராம்
ஏலக்காய் தேவையான அளவு
செய்முறை :
இவற்றை எல்லாம் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு
1 டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மசாலா காபி பொடியுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துப் போட்டு கொதிக்க வைக்கவும் .
இப்போது சூடான 'மசாலா காபி தயார் .
பலன்கள்
* நெஞ்சு சளியை நீக்குகிறது,
* புத்துணர்வு தருகிறது .
* கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
* சுவாசத்தை சீராக்குகிறது.
* உடலின் பித்த அளவினை சரி செய்கிறது