சூப்பரான காடை முட்டை குழம்பு செய்வது எப்படி?





சூப்பரான காடை முட்டை குழம்பு செய்வது எப்படி?

காடை முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் : காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் பி1 , விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ உள்ளது. 
சூப்பரான காடை முட்டை குழம்பு செய்வது எப்படி?
கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்து அளவால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. 

இதுவும் கோழி முட்டையை போன்றே புரதச்சத்து நிறைந்தது. இதனால் புதிய செல்களின் வளர்ச்சிக்கும், தசைகள், எலும்புகள் மற்றும் இரத்தக் குழாய்களுக்கும் நன்மை சேர்க்கிறது. 

எனவே ஹெல்தியான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு காடை முட்டை சிறந்தது. காடை முட்டையில் இரும்புச் சத்து உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? 
ஆம், காடை முட்டை இரும்பு சத்து நிறைந்தது என்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு நல்லது என்கிறது International Journal of Pharmacology and Therapeutics-யில் வெளியிடப்பட்ட ஆய்வு. 

உடலின் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொடுக்க இரும்புச்சத்து முக்கியமானது. அதோடு தசைகள், செல்களுக்கு ஊட்டமளிக்கவும் இரும்புச்சத்து அவசியம். 

எனவே இதற்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது அவசியம். அது காடை முட்டையில் நிறைவாகவே இருப்பதால் தயக்கமின்றி சாப்பிடலாம். இரும்புச்சத்துடன் பொட்டாசியமும் உள்ளது. 

இதனால் இரத்த செல்கள் உருவாகவும் வழிவகை செய்கிறது. காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காடை முட்டை – 20

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

இஞ்சி-பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி – 2 (விழுதாக அரைத்தது)

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 மேஜைக்கரண்டி

நீர் – தேவையான அளவு

கொத்த மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை :
சூப்பரான காடை முட்டை குழம்பு
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். 

அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்
மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும் அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். 

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். காடை முட்டை குழம்பு ரெடி!!
Tags: