ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. ஓட்ஸ் உணவை கொண்டு இட்லி, தோசைகள், ஊத்தப்பம்கள், குக்கீஸ், கேக்குகள், ஸ்மூத்திகள் உள்ளிட்டவைகளை தயாரிக்க பயன்படுகிறது.
ஓட்ஸில் நம் உடலுக்கு தேவையான, அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன.
100 கிராம் ஓட்ஸில், 389 கலோரி சக்தி உள்ளது. ஒரு கோப்பை ஓட்ஸ் உணவில், நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் புரதங்கள் உள்ளன.
ஓட்ஸ் உணவில், பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையத்தக்க நார்ச்சத்து உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தக்க வகையிலான பீட்டா குளுகானை எளிதில் உறிஞ்சத்தக்க ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க ரத்த வெள்ளை அணுக்களுக்கு துணை நிற்கிறது.
உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்து வதற்கு, பீட்டா குளுகான்கள், அதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்களுக்கு சென்சிடிவ் ஆக விளங்குகிறது.
பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் உள்ளிட்டவைகளால் நமது உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க இது உதவுகிறது.
துத்தநாகம் மற்றும் செலீனியம், உடலில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சுவாசப்பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்கிறது.
சிறு குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே, அவர்களது உணவில், ஓட்ஸை கலந்து கொடுத்து வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா தொந்தரவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு, தட்டு கொண்டு மூடி வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி இறக்கி,
இறுதியில் கொத்த மல்லியைத் தூவினால், சுவையான ஓட்ஸ் மசாலா கஞ்சி ரெடி!