பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்வது? #Avial





பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்வது? #Avial

வேர்க்கடலையைப் ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு என்றே சொல்லலாம். அதிலும் வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அன்றைய நாளுக்கான ஒட்டு மொத்த எனர்ஜியையும் அதிலிருந்து பெற முடியும். 
பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்வது?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. 
மிதமான அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். நீரழிவு பிரச்சினை இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்ப்பார்கள். 

ஆனால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. வறுத்த வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். 

அது அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுத்து வயிறு நிரம்பிய உணர்வையும் தரும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் பச்சை வேர்க்கடலையில் மிக அதிகமாகவே இருக்கின்றன.

அதோடு பச்சை வேர்க்கடலையில் ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்து, இதயத்தைப் பலப்படுத்துகிறது.

அப்பாவின் மரண பயம்... அப்பாவை மனநல மருத்துவரிடம் அழைத்து போ.. நெக்ரோபோபியா !

தேவையான பொருட்கள் .:

பப்பாளிக்காய் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்),

ஊறவைத்த வேர்க்கடலை - 150 கிராம்,

தேங்காய் - ஒரு மூடி,

பச்சை மிளகாய் - 6,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க.:

கடுகு - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சுவையான செட்டிநாடு இட்லி பொடி செய்வது எப்படி?
செய்முறை.:
பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு ஆகிய வற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் வேர்க்கடலை, நறுக்கிய பப்பாளிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
7 வினாடி விளம்பரத்திற்கு 10 இலட்சம்...  ரம்மி நிறுவன ஊழியர் சொன்ன இரகசியம் !
பின்பு அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி விட்டு, தாளிக்கக் கொடுத்ததைத் தாளித்து இறக்கினால், சுவையான பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு தயார். 

இது கலந்த சாத்துக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.