நாம் எல்லோருக்கும் பரிச்சயமான முருங்கை மரமானது கீரைகளின் அரசன், கீரைகளின் முதல்வன், அதிசய மரம், வாழ்க்கை மரம், பிரம்மவிருட்சம் போன்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது.
இது காலம் காலமாக மருத்துவ குணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருப்பதுடன், உடலை சீராக பராமரிக்க பல்வேறு வகையி்ல் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முருங்கை இலைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால், அதிலிருக்கம் குளோரோ ஜெனிக் அமிலம் போன்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
உடலில் வயதானால் ஏற்படும் மூட்டு வலிகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கான, முருங்கையை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முருங்கை இலையில் உள்ள Anti-Inflammatory அதற்கு பெரிதும் உதவுகின்றது.
டயாபடீஸ் என்னும் நீரழிவு நோய் உடைய நோயாளிகள், கட்டாயம் உணவில் முருங்கையை தினந்தோறும் சாப்பிட வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், அதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும் என்று காரணம் கூறுகின்றனர்.
நீரழிவு நோய் நோயாளிகள் மறவாமல் உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்ள முயல்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 2 கப்
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
செய்முறை:
முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும்.
பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேக விடவும்.