சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி செய்வது எப்படி?





சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி செய்வது எப்படி?

கோடையில் காலத்தில் நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய உடலில் போதுமான அளவு நீர்சத்து அளவை பராமரிக்க மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி செய்வது எப்படி?
இதற்கு கோடையில் நம் உணவு பழக்கங்களை சரியாக அமைத்து கொள்ள வேண்டும். வெப்பத்தின் கடும் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் கோடை காலத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

உடல் மற்றும் சருமம் இரண்டையும் இந்த கோடையில் ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் உங்கள் டயட்டில் அடிக்கடி ப்ரோக்கோலியை சேர்த்து கொள்ளலாம். 
கோடை சீசனில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் நீங்கள் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் தாராளமாக ப்ரோக்கோலியை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். 

பொதுவாக அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள் வெப்பம் மிகுந்த கிளைமேட்டில் நம் உடலை புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. 

அந்த வகையில் ப்ரோக்கோலியில் சுமார் 92% தண்ணீர் உள்ளதால் உங்கள் எனர்ஜி லெவலை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - 1/4 கப்

கோதுமை மாவு - 1 1/2 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி - ஒரு சிறு துண்டு

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலி மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு இறக்கி ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி ப்ரோக்கோலியை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இஞ்சி, ப்ரோக்கோலி, கொத்தமல்லி, ப்ரோக்கோலி வேக வைத்த தண்ணீர் ஆகிய வற்றை சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, அரைத்த ப்ரோக்கோலி விழுது, தேவையான அளவு ப்ரோக்கோலி வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி போட்டு எடுக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 
வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.
Tags: