பலாக்கொட்டை துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





பலாக்கொட்டை துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காய வைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும் போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
பலாக்கொட்டை துவையல்
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளில் உள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது. 

எனவே, பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில், தேய்த்து வந்தால் சரும பொலிவு கிடைக்கும். அல்லது தேனுடன் கலந்தும் பேஸ் பேக் போல பயன்படுத்தலாம். 

சரும நோய் பிரச்னைகள் நீங்கும். அது மட்டுமல்ல, முக சுருக்கங்களை குறைக்கவும் இந்த கொட்டைகள் உதவுகின்றன. 
அனைத்துக்கும் மேலாக, மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதங்கள் அதிகமாக இருப்பது, சருமத்துக்கு கவசம் போல பாதுகாக்க உதவுகின்றன. இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை. 

நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது. 

கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் தொந்தரவு களிலிருந்தும் தடுக்கிறது. மாலைக்கண் நோய்களும் தடுக்கப் படுகின்றன.
தேவையான பொருட்கள் :

பலாக்கொட்டை - 10 எண்ணம்

வற்றல் மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1/2 கப்

சிறிய உள்ளி - 5

பூண்டு - 4 பல்

ஜீரகம் - 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு
செய்முறை :
ஒரு சீனச்சட்டி அடுப்பில் வைத்து அதில் பலாக்கொட்டையைப் போட்டு மீடியம் ஃப்ளேமில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பலாக்கொட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வற்றல் மிளகாயையும் சீனச் சட்டியில் வறுத்து எடுக்கவும். அதே சீனச் சட்டியில் 2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சிறிய உள்ளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதாக வதக்கி எடுக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பலாக்கொட்டை, வற்றல் மிளகாய், ஜீரகம், வதக்கிய சிறிய உள்ளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பும் சேர்த்து துவையல் பருவத்தில் அரைத்து எடுக்கவும். 

மிகவும் சுவையான பலாக்கொட்டை துவையல் ரெடி.