ஆரோக்கியமான பால் உணவான பன்னீர், அனைவராலும் விரும்பப்படும் ஒரு உனவாக உள்ளது. சுவையில் சிறந்த பனீர் சாப்பிட விரும்பாத சைவ உணவு பழக்கம் உள்ளவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
ஆனால், பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், முழுமையாக அதன் ஊட்ட சத்துக்களை பெற முடியும்.
பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது.
நீங்கள் பனீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. பன்னீரில் ஏராளமான புரதங்களும் நல்ல கொழுப்புகளும் உள்ளன.
அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும்.
சரி, இப்போது பன்னீர் கொண்டு அருமையான பன்னீர் கொத்து பரோட்டா ரெசிபி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
பிய்த்த பரோட்டா - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
பன்னீர் - தேவைக்கு,
தக்காளி -1,
வெங்காயம் -1,
வெஜிடபிள் குருமா - தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, பன்னீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும்.
பின்னர் பிய்த்த பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு பிரட்டினால் பன்னீர் கொத்து பரோட்டா ரெடி.
குறிப்பு:
வெஜிடபிள் குருமா இணைப்பது சுவையே.