உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. நார்சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கவும் உதவுகின்றன.
எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுபடுவதையும் தடுக்கிறது. சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
உடலில் புதிய இரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துக்குடி பழச்சாறு அருந்த வேண்டும். உடல் அசதி போகும். அதனால் தான் நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது.
சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
இந்த பழத்தில் லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் உள்ளது, இதை தினமும் சாப்பிடுவதால் கேன்சர் ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செரிமானத்திற்கு சிறந்தது சாத்துக்குடி பழம், இந்த சாறை பருகுவதாலோ அல்லது பழத்தை உண்பதாலோ ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இந்த பழத்தை சாப்பிடுவதால் பொட்டாசியம், இரும்புசத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ,சி மற்றும் பி1 மற்றும் நிறைய கனிமங்கள் உடலுக்கு கிடைக்கிறது.
ஜீரண சக்தி தரும் வெந்தயக்கீரை சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்.:
பாசிப்பருப்பு – 50 கிராம்,
சாத்துக்குடி – ஒன்று,
நறுக்கிய கொத்த மல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
இஞ்சி – கால் அங்குலத் துண்டு,
உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க.:
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை.:
குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து நீர் விட்டு தோல் சீவி துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
நன்றாக வெந்ததும் மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு, இறக்கி வைத்து, சாத்துக்குடியை பிழிந்து, கொத்த மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு.:
இந்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால், சத்தை இழந்து விடும்.