ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி?





ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி?

பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. 
ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்
நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த  ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில்  இருக்கும். 

பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க  உதவுகிறது பச்சை மிளகாய். பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. 

இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம். பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. 

இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும்.  

எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.பச்சை மிளகாயில்  கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது இதனை பயன்படுத்தலாம்.

ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.  

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – 20,

எள் – 2 டீஸ்பூன்,

சோம்பு அல்லது சீரகம் – 2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்,

கடுகு – 4 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.
பிறகு சீரகம் – எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். 

எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். 2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு பயன்படுத்தவும்.
Tags: