சேமியா பாயசம் ருசியாக செய்ய டிப்ஸ் !





சேமியா பாயசம் ருசியாக செய்ய டிப்ஸ் !

இட்லிக்கு மாவை மிக்சியில் அரைக்கும் போது ஊற வைத்த அரிசி, உளுந்தம் பருப்பை சிறிது நேரம் குளிர்பதன பெட்டியில் வைத்து விட்டு அரைத்தால் மாவு சூடாகாமல் இருக்கும்.
சேமியா பாயசம் செய்ய டிப்ஸ்
உருளைக்கிழங்குகள் முளை விடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கலாம்.
பாயசம் செய்யும் முன்பு ஜவ்வரிசையை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு, சேமியாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து செய்தால் பாயசம் ருசியாக இருக்கும்.

நூடுல்ஸ் மீதம் இருந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பூரி செய்யும் போது சிறிது மைதா மாவு, ஒரு தேக்கரண்டி ரவையை சேர்த்து செய்தால் பூரி அதிக நேரம் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும். உடலுக்கு மிகுந்த சத்து கிடைக்கும்.

அவல் பாயசம் செய்யும் போது ஒரு கப் பாலும், ஒரு கப் தேங்காய் பாலும் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

மைதா, அரிசி மாவுடன் உப்பு, சீரகம், மோர், தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, தோசைக் கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து முறுகலாக எடுத்தால் சுவையான மைதா மோர் தோசை தயார்.
Tags: