உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம். ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது.
புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
புற்றுநோய் உள்ளவர்கள் தங்களது உணவில் சோயா பீன்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொண்டால், நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் மருத்துவர்கள். டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது.
சோயா பீன்ஸ்களில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
எனவே நீரழிவு நோயாளிகள் அடிக்கடி சோயாபீன்ஸ் சாப்பிடலாம். சோயா பீன்ஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
முளைவிட்ட சோயா பீன்ஸ் - 300 கிராம்
கேரட் - 1
முட்டைக்கோஸ் - சிறிய துண்டு
டோஃபு - 200 கிராம்
வெங்காயம் - 1
உப்பு, மிளகு துள் - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
எள், ரோஸ்ட் செய்தது - 2 தேக்கரண்டி
இனிப்பு சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
முளைவிட்ட சோயா பீன்ஸை வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
டோஃபுவை நீவவாக்கில் வெட்டி வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முளைத்த சோயா பீன்ஸ் விதை, கேரட், முட்டைக்கோஸ், டோஃபு, உப்பு, மிளகு தூள், வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நல்லெண்ணெயால் சீசன் செய்யவும், பின்னர் இனிப்பான சோயா சாஸை சேர்க்கவும். எள், கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சத்தான சோயா பீன்ஸ் டோஃபு சாலட் ரெடி.