சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி? #payasam





சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி? #payasam

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். 
சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி?
பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண்  பார்வை சிறப்பாக இருக்கும். 
உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.  

வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.   

சரி இனி பூசணிக்காய் கொண்டு டேஸ்டியான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்.:

தோல் சீவி, விதை நீக்கி துருவிய மஞ்சள் பூசணி – ஒரு கப்,

சர்க்கரை – ஒரு கப்,

பால் – ஒரு லிட்டர்,

கண்டன்ஸ்டு மில்க் – அரை கப், 

குங்குமப்பூ – சிறிதளவு,

தேங்காய்த் துருவல் – கால் கப்,

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

நெய்யில் வறுத்த பாதாம்,

முந்திரி – தலா ஒரு டேபிள் ஸ்பூன், 

நெய் – சிறிதளவு,

நெய்யில் வறுத்த உலர் பூசணி விதை – ஒரு டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் – ஒரு துளி.
செய்முறை.:
சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி?
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு பூசணித் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் பால் ஊற்றி (சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்) நன்றாக வேக விடவும்.

பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ, பூசணி விதை சேர்த்துக் கிளறி இறக்கவும். 
மேலே வெனிலா எசென்ஸ் விட்டுச் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறவும். பூசணிக்காய் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
Tags: