பேபி கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு விருப்பமான பேபி கார்ன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1 கப்
பேபி கார்ன் – 2 கப் (நீளமாக வெட்டியது)
நெய் – 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
பால் – 1 கப்
தண்ணீர் – ½ கப்
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சோம்பு, சீரகம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து அதில் நறுக்கிய மக்காசோளம் சேர்த்து நன்கு கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் பால், தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதி வரும் போது பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.
பிரஷர் போனவுடன் மூடியை திறந்து கொத்த மல்லித்தழை, சிறிது நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
பேபி கார்ன் புலாவ் ரெடி.