கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க !





கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க !

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க
இந்த வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கை கழுவுதல், தும்மும் போது மற்றும் இருமலின் போது முகமூடியைத் தவறாமல் பயன்படுத்துதல்
உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இவை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அடிப்படை விஷயங்களாக இருந்தாலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதும் முக்கியம் என மருத்துவர்களும் கூறுகிறார்கள். 

ஆனால் நம் வீட்டுச் சமையலறையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் சில பாட்டி வைத்தியங்கள் உள்ளன. 

அவற்றை கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் அன்றாடம் உட்கொண்டு வந்தால், எளிதில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.

சரி, இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம். 

அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாகும். இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கக் கூடியது. 
1/2 டீஸ்பூன் நற்பதமான நெல்லிக்காய் பேஸ்ட்டை, நன்கு அரைத்த 1 பூண்டு பல்லுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் பலவீனமான ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.

வேப்பங் கொளுந்து
வேப்பங் கொளுந்து
முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பங் கொளுந்தை கிள்ளி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடுவார்கள். 

இது இரத்தத்தை சுத்தம் செய்யும் சிறப்பாக செயலாக நம்பப்பட்டது. வேப்பிலையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி -பாக்டீரியல் பண்புகள் நாம் நினைத்திராத அளவில் ஏராளமாக நிறைந்துள்ளது. 

ஆகவே வேப்பிலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரிக்கும்.

துளசி, இஞ்சி, மிளகு டீ
துளசி, இஞ்சி, மிளகு டீ
ஒரு கப் நீரில் சிறிது துளசி இலைகள், ஒரு துண்டு இஞ்சி மற்றும் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 
இந்த டீயில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த டீயை தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும்.

ஆரஞ்சு ஜூஸ் உடன் மிளகு
ஆரஞ்சு ஜூஸ் உடன் மிளகு
ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து தினமும் குடியுங்கள். இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது 

மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இயற்கையாக வலுபெறும்.

இஞ்சி-துளசி
இஞ்சி-துளசி
நற்பதமான இஞ்சியைக் கொண்டு சாறு எடுத்து, அதில் சிறிது துளசி இலையின் சாற்றினையும் சேர்த்து கலந்து, அத்துடன் தேன் கலந்து உட்கொள்ளுங்கள். 
இப்படி தினமும் குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

துளசி-மிளகு
துளசி-மிளகு
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5-7 துளசி இலையுடன், 2 மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். 

முக்கியமாக இதை சாப்பிட்ட 1/2 மணிநேரத்திற்கு தண்ணீர் பருகக்கூடாது. இப்படி உங்களின் தினத்தை இவ்வாறு ஆரம்பித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சுக்கு உருண்டை
சுக்கு உருண்டை
ஒரு டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் பசு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் சுக்கு/ காய்ந்த இஞ்சிப் பொடி சேர்த்து நன்கு கலந்து, 
சிறு உருண்டையாக பிடித்து, தினமும் 2-3 முறை உட்கொள்ள வேண்டும். இதனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்.

மஞ்சள் பால்
மஞ்சள் பால்
மஞ்சள் கலந்த பால் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் என்பது அனைவருக்குமே தெரியும். 

அதிலும் கொரோனா வைரஸ் பரவும் இந்த சீசனில், ஒரு டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். 

அதுவும் தினமும் இரவு தூங்குவதற்கு 20-30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.
Tags: