உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வார்கள். அதில் முதன்மையான இடத்தில் உள்ள காய்தான், நூல்கோல் ஆகும்.
நூல்கோல் அல்லது நூக்கல் என்பார்கள்.. நூற்கோல் என்றும் சொல்வார்கள்.. வைட்டமின்கள் A,E,C, போன்றவைகளும், மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச் சத்துக்களும் இந்த காயில் நிறைந்திருக்கின்றன.
உடல் எடை குறைய: கலோரிகள் மிகவும் குறைவு... அத்துடன், நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காயாகும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால்தான், மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது.
இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. இன்னும் சொல்லப்போனால், உடல் எடை குறைக்க மிகச்சிறந்த காய் இது தான். இந்த காயை உண்ணும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது.
நீண்ட நேரத்திற்கு பசியும் எடுக்காது. இதனால் எடையும் குறைகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு பித்தநீரையும் உறிஞ்சும் ஆற்றல் கொண்டது இந்த நூக்கல்.
நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமானத்தையும் சீராக்கி விடுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த காயை தாராளமாக சாப்பிடலாம். அத்துடன், வயிறு பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது.
வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன.
இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
நூல்கோல் - 2
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூல்கோலை தோல் சீவியப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும், வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விடுங்கள்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத்
சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்த மல்லித் தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.
சத்தான நூல்கோல் சூப் ரெடி.