கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வது எப்படி?





கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வது எப்படி?

கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் நன்மைகள் சொல்லி அடங்காது. 
கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வது எப்படி?
இந்த கறிவேப்பிலையில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. 

இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. 

உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருக்கிறது.

கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு மற்றும் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. 
இந்த கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் இருக்கிறது. அதே நேரத்தில் போலிக் ஆசிட் இருக்கிறது. இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். 

முடிந்தவரை உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது. இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து சுவைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :

மினி இட்லி – 10

கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்

இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – சிறிது

உப்பு – ருசிக்கு

தாளிக்க.

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை பொடி செய்யத் தேவையான பொருட்கள் . :

கறிவேப்பிலை - 2 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய வைக்கவும். 

பின்னர் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, உப்பு, புளி, கொத்த மல்லி விதை ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அடுப்பை அணைத்து, அதிலிருக்கும் சூட்டிலேயே கறிவேப்பிலையை சேர்த்து லேசாகப் பிரட்டி எடுக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் இட்டு, அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொடியாக அல்லது நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது சூப்பரான மற்றும் இட்லி, தோசைகளுக்கு ஏற்ற கறிவேப்பிலை பொடி தயாராக இருக்கும். 
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் இட்லியை போட்டு
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க எளிய வழிகள் !
அதன் மேல் கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு தூவி நன்றாக குலுக்கி இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது.
Tags: