தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி?





தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். 
தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு
சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.

பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். 

இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
திருக்கை மீன் – 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)

தேங்காய் துருவல் – அரை கப்

மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 1

புளி – சிறிய எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் – 3

கடுகு – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு
செய்முறை :
இஞ்சியை துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். 

தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். 
மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் 
கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும். சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
Tags: