ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள தக்காளியை ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சமையலில் அது கொடுக்கும் மனமும், புளிப்புச் சுவையும் அலாதியானது.
அது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் நிரம்பியுள்ளன. இத்தகைய தக்காளியை தினசரி சாப்பிடுவதால் அல்லது அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கவனிக்க வேண்டியுள்ளது.
இது குறித்து ஹைதராபாதைச் சேர்ந்த மூத்த மருத்துவர் சோம்நாத் குப்தா கூறுகையில், தக்காளியில் விட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது. விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது.
விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
தக்காளியில் நிறைவான நீர்ச்சத்தும், குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும்.
அது மட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி கட்டுப்படுத்தப் படுகிறது.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு தேகரண்டி
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
பூண்டு – ஆறு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
பிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பில்லை, வெங்காயம், தக்காளி ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், பெருங்காயம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
தொக்கு போல் வந்தவுடன் இறக்கி இட்லி, தோசை, நீர் தோசைவுடன் பரிமாறலாம்.