ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?





ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

மட்ட‍ன் பிரியாணியின் ருசியே தனிதான். ஆனாலும் இந்த ஆம்பூர் பிரியாணி யின் ருசியிருக்கே! அப்பப்பா சொல்லும் போதே
ஆம்பூர் மட்டன் பிரியாணி
நாக்கில் எச்சில் ஊறுகிறது. அவ்வ‍ளவு ருசி. சரி சரி பேசிக்கிட்டே இருந்தா எப்ப‍டிங்க, சட்டு புட்டுன்னு கீழே சொல்லியிருக்கிறத யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகுங்க.

எதுக்கா, அட போங்க, இந்த ஆம்பூர் பிரியாணி சமைக்கத்தான் ருசிக்கத்தான்.
தேவையானவைகள் :

பாசுமதி அரிசி – ஒரு கிலோ

மட்டன் – ஒரு கிலோ

வெங்காயம் – அரை கிலோ

தக்காளி – அரை கிலோ

பச்சை மிளகாய் – ஆறு

காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் – இரண்டு தேக் கரண்டி

தயிர் – ஒரு கோப்பை

கொத்து மல்லித் தழை – ஒரு கொத்து

இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

புதினா – ஒரு கொத்து

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

பிரியாணி இலை – இரண்டு

உப்பு தூள் – தேவையான அளவு

எண்ணெய் – 200 மில்லி

நெய் – 50 மில்லி

எலுமிச்சை –அரை பழம்

செய்முறை:

அரிசியை தண்ணீரில் கழுகி ஊற வைக்கவும். கொழு ப்பு சேர்க்காமல், மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
வாயகன்ற த்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சுடானதும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இ லைபோட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து அதனை எண்ணெயுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வத க்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடு த்து தக்காளியும் கொத்து மல்லியும் சேர்க்கவும். 

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகா ல் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். 

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை நன்கு அலசி போட்டு கொதிக்க விட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, 

பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடு ம் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாம ல் பிரட்டி எடுக்கவும். சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
Tags: