ஹைதராபாத் தம் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும் அதிக மசாலா இல்லாத தக்காளி சேர்க்காமல் 40, 45 நிமிடங்கள் வரை
தம்மில் குறைந்த தீயில் வேக வைப்பது. பப்பாளிகாய் சேர்ப்பதால் மட்டன் சீக்கிரம் வேகும்.
தம்மில் குறைந்த தீயில் வேக வைப்பது. பப்பாளிகாய் சேர்ப்பதால் மட்டன் சீக்கிரம் வேகும்.
தேவையான பொருட்கள்
மட்டனுடன் ஊற வைக்க
மட்டன் எலும்புடன் 600 கிராம்
தயிர் 200 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா பவுடர் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்க்ரண்டி
வறுத்த வெங்காயம் 100 கிராம்(Fried Onion)
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
முந்திரி ( அரைத்தது) 50 கிராம்
பப்பாளி காய் அரைத்தது 25 கிராம்
எண்ணை 4 மேசைகரண்டி
சாதம் வேக வைக்க
தண்ணீர் ஓன்னறை லிட்டர்
தரமான பாசுமதி அரிசி 500 கிராம்
பட்டை , லவஙகம் , ஏலம் சிறிது
கருப்பு சீரகம் ( ஷாஹீரா)
கொத்துமல்லி தழை ஒரு கட்டு
புதினா ஒரு கட்டு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்
குங்குமபூ ஒரு பின்ச் 5 மேசைகரண்டி சூடான பாலில் ஊற வைத்தது
எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி
சப்பாத்தி மாவு 100 கிராம்
அவித்த முட்டை 2 (4 ஆக கீறியது)
செய்முறை
முதலில் வறுத்த வெங்காயம் தயார் செய்து வைத்து கொள்ளவும், வெறும் தவாவில் கொஞ்சமா எண்ணை விட்டு வெங்காயத்தை வறுத்து வைத்து கொள்ளவும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
மட்டனை சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மட்டன், தயிர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கரம்மசலா, வறுத்த வெங்காயம்,
இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பப்பாளி விழுது, அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பப்பாளி விழுது, அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் எண்ணை + உப்பு சேர்த்து, அரிசியை களைந்து சேர்த்து பட்டை லவங்கம் ஏலம், ஷாஜீரா, சிறிது கொத்து மல்லி புதினா சேர்த்து அரை வேக்காடாக வடித்து வைக்கவும்.
வடித்த சாதத்தை முன்று பாகங்களாக பிரிககவும்
.
ஊறவைத்த மட்டனை இரண்டு அல்லது முன்று பாகமாக பிரித்து வைக்கவும்
அடிகனமான பாத்திரத்தில் முதலில் ஊறவைத்த மட்டன் கலவை, அடுத்து முக்கால் பாகம் வேகவைத்த அரிசி, அடுத்து வறுத்த வெங் காயம் அடுத்து கொத்துமல்லி, புதினா தழைபோட்டு சமப்படுத்தவும்.
(இதே போல் மீதி உள்ள அரிசி மற்றும் மட்டன், மற்ற பொருட்களை யும் அதே போல் லேயராக வைத்து சமப்படுத்தவும்). (நான் இதில் இரண்டு லேயர்கள் மட்டும் போட்டுள்ளேன்.
மேலும் அடுத்த பகுதி அரிசியை சேர்த்து சமப்படுத்தி அதன் மேல் கொஞ்சம் ஊறவைத்த மட்டனை வைக்கவும்,
அதன் மேல் சிறிது சாப்ரான் பால், கொத்து மல்லி புதினா தழை, அரிந்த பச்சை மிளகா ய், வறுத்த வெங்காயம் அனைத்தையும் தூவவும்..
அதன் மேல் சிறிது சாப்ரான் பால், கொத்து மல்லி புதினா தழை, அரிந்த பச்சை மிளகா ய், வறுத்த வெங்காயம் அனைத்தையும் தூவவும்..
சப்பாத்தி மாவை கயிறு போல் திரித்து பாத்திரத்தின் விளிம்பின் வாய் பகுதியில் சுற்றிலும் ஒட்டவும். பாத்திரத்தை மூடி 30 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.
அரை மணி நேரம் தம்மில் விடவும். பிறகு தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் சட்டிக்கு கீழ் வைத்து சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.
சப்பாத்தி மாவு இல்லாமலும் தம் போடலாம். பிரியாணி சட்டி நன்கு இறுகலாக முடி இருக்கனும் அவ்வளவுதான்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !
தம் போடுவதை முன்று முறைகளாக செய்யலாம்.
1. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி கணமான ஈரடவலை வைத்து மேலே மூடி போட்டு சூடானா கஞ்சி அல்லது, நெருப்பு கங்குகள் வைத்து தம் போடலாம்.
2. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி பாயில் பேப்பரை போட்டு மூடி போட்டு அதன்மேல் சூடானா கஞ்சி வைத்து தம் போடலாம்.
3. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு மூடிக்கு பேப்பர் கிளிப் கள் பொருத்தி அதன் மேல் வடித்த சூடான கஞ்சியை ஏற்றி தம் போடலாம்.
சும்மா சும்மா இடையில் திறந்து கிளற கூடாது.
தம் போட்டு முடிந்ததும் எடுத்து லேசாக கிளறி விட்டு பரிமாறும் தட்டில் வைத்து சிறிது வறுத்த வெங்காயம், அவித்த முட்டை , கொத்து மல்லி தழை அல்லது புதினா தழை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான ஹைதராபாதி நிஜாமி பிரியாணி ரெடி.