சிக்கன் வெஜ் சூப் தயாரிப்பது எப்படி?





சிக்கன் வெஜ் சூப் தயாரிப்பது எப்படி?

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். 
சிக்கன் வெஜ் சூப் தயாரிப்பது எப்படி?
நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். 

இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? 

வீட்டிலேயே சிக்கன் வெஜ் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

தேவையானவை
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்

மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - கால் கப்

அரை வட்டமாக நறுக்கிய கேரட் - கால் கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப்

சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி

இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

சில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி

கொத்த மல்லித் தழை - சிறிது

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகு - ஒரு தேக்கரண்டி

சோளமாவு - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கன் வெஜ் சூப்
முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து பொரிந்ததும் 

ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ் இஞ்சி, பூண்டு விழுது, கொத்த மல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.
Tags: