சுவையான கும்பகோணம் கொஸ்து செய்வது எப்படி?





சுவையான கும்பகோணம் கொஸ்து செய்வது எப்படி?

பச்சைப் பயறில் புரதசத்து, நார்சத்து, கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி, ஏ ஆகியவையும் காணப்படுகின்றன. 
சுவையான கும்பகோணம் கொஸ்து செய்வது எப்படி?
இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது. பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. 

உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது. 

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், நிலக்கடலையை குறைத்து கொள்ள வேண்டும். அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம். 

சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் நல்லது. பயறு வகைகளை கொண்டு செய்யப்படும் ஸ்பெஷலான ஒரு உணவு தான் இந்த கும்பகோணம் கொஸ்து. 

கும்பகோணத்தில் என்ன பேமஸ் என எல்லோரிடமும் கேட்டால் அவர்களுக்கு முதலில் நினைவில் வருவது டிகிரி காபி தான். அந்த காபியின் சுவை மட்டுமா நாவில் ஊறுகிறது. 

அட இல்லைங்க, இந்த கும்பகோண கொஸ்துவின் சுவையும் தான் என்கின்றனர் இங்கே இருப்பவர்கள். அப்படி என்ன தான் இதில் இருக்கிறது. பார்க்கலாமா! 
தூண்டல் அடுப்பு (இண்டக்சன் ஸ்டவ்) தெரிந்து கொள்ள !
தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1 கப்

பச்சைப் பயறு - 2 கரண்டி

நிலக்கடலை - 2 கரண்டி

கொள்ளு - 2 கரண்டி

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

பச்சை கத்தரிக்காய் - 2

காய்ந்த மிளகாய் - 2

கடுகு -1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - 1/4 தேக்கரண்டி

சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு
செய்முறை:

பயறு வகைகளை முதல் நாளே ஊற வைத்து முளைகட்ட வைத்து எடுத்து கொள்ளுங்கள். அவற்றை வேக வைத்து 

அவற்றுடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து சூட்டடுப்பில் வைத்து ஒரு சத்தம் வந்ததும் தணலைக் குறைத்து 5 நிமிடம் வேக வையுங்கள்.

ஒரு தேக்கரண்டி நெய்யை வாணலியில் போட்டு அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகிய வற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
Tags: