நூல்கோல் தமிழில் நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன. நூக்கலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம்.
வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதோடு பித்த நீரையும் உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.
இந்த காயிலும் அதன் இலையிலும் உள்ள அதிக அளவிலான ஃபோலேட் சத்து இதயத்தை பாதுகாப்பதோடு மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது.
நூல்கோலின் வேர்ப்பகுதியில் மிக அதிக அளவில் பீட்டா கரோட்டீன் ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது. மேலும் தசைகளை வலுவாக்க உதவுகிறது.நூல்கோல் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று.
இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி – 1 டேபிள் ஸ்பூன்,
(கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக் காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரை வள்ளி கிழங்கு, வெள்ளைப் பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 1,
நறுக்கிய தக்காளி – 1,
புதினா, கொத்த மல்லித்தழை – சிறிது,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 3 டீஸ்பூன் + எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி கரம் மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கிய காய்கறி களை சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு:
கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கவும். பிரெட் துண்டுகளுடன் பரிமாறவும்.