ஆட்டிறைச்சி எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாவதை தூண்டுகிறதாம்.
அத்துடன், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால் தான், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்கிறார்கள்.
மாரடைப்பு மட்டுமல்ல, ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுவதால், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறார்கள். மட்டனை அதிக வெப்பநிலையில் சமைப்பது, உடலில் வீக்கத்தை அதிகரிக்குமாம்.
இதனால், புற்றுநோய் போன்ற பயங்கர நோய்கள் வருவதோடு, நாள்பட்ட உடல்நல கோளாறுகளையும் உண்டு பண்ணி விடும் வாய்ப்பு உள்ளதாம்.
வாரம் ஒரு முறை மட்டுமே ஆட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைப்பதும் இதற்காகத்தான். கடின உழைப்பாளிகள் என்றால், கலோரிகள் உடனே எரிக்கப்பட்டு விடும்.
அசைவம் சாப்பிட்டாலும் பெரிதாக பாதிப்பு வராது.. அதே சமயம், மட்டன், சிக்கன் எதுவானாலும், செரிமான பிரச்சனையையும் உண்டு பண்ணி விடும்.
மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) – 200 கிராம்
சோம்பு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
காய்ந்த மிளகாய் – 20 கிராம்
தேங்காய் – 50 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
சின்னவெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 20 கிராம்
கொத்த மல்லித்தழை – 20 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கலரிசியை தனியாகவும், கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து இறக்கவும்.
புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடைசியாக மட்டன் கொத்து கறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான மட்டன் அடை ரெடி.