சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி தயார் செய்வது எப்படி?





சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி தயார் செய்வது எப்படி?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி தயார் செய்வது எப்படி?
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. 

சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்  பெறும். 

காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. 

மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

கருப்பட்டி – 1/4 கப்,

காபித்தூள் – 2 டீஸ்பூன்.

செய்முறை : 
கருப்பட்டி காபி தயார் செய்வது எப்படி?
முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும். 

டிகாக்‌ஷன் இறங்கியதும் அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும். விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

பலன்கள்:

சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.

நன்மைகள் 
இந்த கருப்பட்டி காபியில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. 
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை மேம்படுத்தலாம்.
Tags: