ஏலக்காய் காபி தயார் செய்வது எப்படி?





ஏலக்காய் காபி தயார் செய்வது எப்படி?

ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியாதான். இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. வாசனைப் பொருட்களின் ராணியாக திகழ்கிறது. 
ஏலக்காய் காபி
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு. ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சவும். 

அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். 

விக்கல் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.

ஏலக்காயின் பலன்கள் இன்னும் ஏராளம். சில தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பாலில் கலந்தோ, அல்லது தேநீரிலோ, உணவிலோ சேர்த்துக் கொள்ளுங்கள். 

உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படட்டும். சரி இனி ஏலக்காய் பயன்படுத்தி டேஸ்டியான ஏலக்காய் காபி தயார் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

நீர்,

காபித்தூள்

சர்க்கரை

செய்முறை :
நீர், காபித்தூள், சர்க்கரை ஆகிய அனைத்தையும் ஆகிய அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து பேஸ்டாக்கி, 

பின் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை மற்றும் தண்ணீரையும் சேர்த்து, ஏலக்காயை போட்டு நன்கு கொதிக்க வைத்து, சிறிது காபி பொடி தூவினால், சுவையான ஏலக்காய் காபி தயார்.
நன்மைகள்

ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், விட்டமின் C ஆகியவை நிறைந்துள்ளது. 

எனவே இது ஜீரணக் கோளாறுகள், அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை களுக்கு சிறந்த தீர்வளிக்க உதவுகிறது.
Tags: