ரோஜா குல்கந்த். இது ஆயுர்வேதத்தில் சிறந்த டானின் ஆக சொல்லப்படுகிறது. இயற்கையாகவே கால்சியம் நிறைந்தது. ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை கொண்டுள்ள இது கோடையில் மட்டும் அல்ல எல்லா காலங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
இது இரைப்பை அழற்சி, தோல் பராமரிப்பு, அஜீரணம், அல்சர் மற்றும் மூக்கில் இரத்தப்போக்கு, மன அழுத்தம் போன்றவற்றுக்கு நன்மை அளிக்க கூடியது. இது ஆற்றலை அளிக்கும்.
கடுமையான புண்கள், மலச்சிக்கல் போன்றவற்றையும் சரி செய்யக்கூடியது. வெயில் காலத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மலச்சிக்கல் இருக்கும் போது ரோஜா குல்கந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மலச்சிக்கல் இருக்கும் போது வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையும். தினமும் இரவில் இதை சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகளும் மலச்சிக்கல் இருக்கும் போதும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உண்டாகும் போதும் வெந்நீருடன் இதை சாப்பிட்டு வரலாம். இது வயிற்றுக்கோளாறுகள் அனைத்துக்கும் அருமருந்தாக இருக்கும்.
அல்சர், இரைப்பை பிரச்சனை, அஜீரணக் கோளாறுகளுக்கும் மருந்தாக இருக்கும். வயிறு பிரச்சனை, வாயு கோளாறுகள், வயிற்றுப்புண், செரிமானக் கோளாறுகள் என அனைத்தையும் போக்க ரோஜா குல்கந்து உதவும்.
இது காரத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. வயிறு மந்தமாக இருக்கும் போது குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள்.
அவர்களுக்கு காலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கொடுத்துவந்தால் செரிமானக்கோளாறுகள் சீராகி பசியின்மை பிரச்சனை நீங்கும்.
உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?
நன்றாக பசி எடுத்து குழந்தைகள் சாப்பிட செய்வார்கள். பெரியவர்கள் ஜீரணகோளாறுகளை கொண்டிருந்தால் அவர்களும் தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சீராக செயல்படும்.
என்னென்ன தேவை?
ரோஜா பூ இதழ்கள் - ஒரு கைப்பிடி,
சூடான தண்ணீர் - 1/2 கப்,
கற்கண்டு - 4 டீஸ்பூன்,
கிர்ணிப்பழ விதை, பூசணி விதை - தலா 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்,
இடித்த ஏலக்காய் - 1,
சீவிய பாதாம் - 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 பெரிய டம்ளர்.
தினமும் உணவில் ஊறுகாயை சேர்த்தால் என்னென்ன ஆபத்து !
எப்படிச் செய்வது?
ரோஜா இதழ்களை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். கிர்ணி, பூசணி விதைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
மாத்திரைகளை டீ காபியில் போட்டு விழுங்கினால் என்னாகும் தெரியுமா?
இத்துடன் பால் சேர்த்து கலந்து வடிகட்டி, ஏலக்காய், கற்கண்டு, சோம்பு தூள் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும்,
பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி ரோஜா இதழ், பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் தேன் சேர்க்கலாம்.