காலை உணவாக இருந்தாலும் சரி மதிய வேளை ஸ்நாக்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான தேர்வு என்றாலே அது சுண்டல் வகை தான்.
அதிலும் முளை கட்டிய பச்சை பயறுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சுவை அற்புதமான இருக்கும்.
செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்வது முதல் உடல் எடையை குறைப்பது வரை முளைகட்டிய பச்சை பயிறு தரும் ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலும் பயறு வகைகளை முளை கட்டியபின் சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து மதிப்பீடு அதிகரிக்கும்.
அந்த வகையில் முளைகட்டிய பச்சைப் பயறை நேரடியாகவோ அல்லது வேக வைத்தோ அல்லது ஏதேனும் உணவில் பயன்படுத்தியோ நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காலையில் 100 கிராம் பச்சை பயிறை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீரில் உற்றி வைக்க வேண்டும். மாலையில் அந்த தண்ணீரை வடித்து விட்டு காற்றுபுகாத ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
காலை எழுந்து பாத்திரத்தை திறந்து பார்த்தால்… காலையில் 100 கிராம் பச்சை பயிறை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீரில் உற்றி வைக்க வேண்டும்.
மாலையில் அந்த தண்ணீரை வடித்து விட்டு காற்றுபுகாத ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க வேண்டும். காலை எழுந்து பாத்திரத்தை திறந்து பார்த்தால் பச்சைப் பயிறு முளைகட்டி இருக்கும் .
இத்துடன் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து காலை உணவாக உண்ணுங்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும்பொழுது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது.
முளைக்கட்டிய பச்சைபயறில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.
முளைகட்டிய பச்சை பயறில் நிறைந்துள்ள வைட்டமின் K வலுவான எலும்புகளை பெற உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள தாவர ஈஸ்ட்ரோஜன்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கும், அதன் அடர்த்தியை பராமரிப்பதற்கும் உதவுகின்றன.
இதை தினசரி உணவில் சேர்த்து வர ஆஸ்டியோபோரோசிஸின் அபாயத்தையும் குறைக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு முளைகட்டிய பச்சை பயறு சிறந்த தேர்வாக இருக்கும்.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன.
கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தவும், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கவும் முளைகட்டிய பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்