கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில் எந்த ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று மக்கள் கூகிளில் தேடி வருகின்றனர்.
இதில் அதிகம் பேர் தேடிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பின் காரணமாக தினமும் பலர் உணவே இல்லாமல் இந்த உலகத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பலர் கடைகள் எல்லாம் பூட்டப்பட்ட நிலையில் வீடுகளிலேயே சமைக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் எந்த ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்று பலரும் கூகிளில் தேடி வருகின்றனர் .
இப்படி தேடியவர்களுள் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நாட்டினரே அதிகமாக உள்ளனர்.
இதில் முதலிடத்தை பிடித்தது வாழைப்பழ பிரட். வாழைப்பழ பிரட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்து கேக் செய்வது எப்படி என்று தான் அதிக பேர் பார்த்துள்ளனர் .
பாலிவுட் பிரபலங்களான அலியா பட், சோனம் கபூர் ஆகியோர் கூட முயற்சித்துள்ளனர்.
மேலும் சாக்லேட் கேக்குகள், கேரட் கேக், சிக்கன் பிரஸ்ட் மற்றும் பிரபலமான காபி பிரியர்களை குஷிப்படுத்த கூடிய புதியவகை காபி ஆன ‘டல்கோனா காபி’ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மேலும் பலர் குடும்பத்துடன் சாப்பிடும் டின்னர் உணவுகளான ஃபிரைட் ரைஸ் மற்றும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட
மாட்டிறைச்சியுடன் கூடிய ஸ்பாகட்டி போலோக்னீஸ் செய்வது எப்படி என்பதையும் அதிகமாக நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நாட்டினர் கூகிளில் தேடியுள்ளனர்.