கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?





கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். 

இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

இந்த ரெசிபி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இறால் – 400 கிராம்

பச்சை மிளகாய் – 5

இஞ்சி – 30 கிராம்

பூண்டு – 30 கிராம்

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – சிறிது

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும். 

கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் உரித்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்து விடக்கூடாது.
இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து பிரட்டினால், கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெடி. இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Tags: