ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம் பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி,
உடலுக்கு வலிமை கிடைக்கும். நடுத்தர வயது மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரசாணையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
இது இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.
உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச்சத்து ஆகும் துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது.
புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
தேவையானப் பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் வெங்காயம் - 3
பெரிய வெங்காயம் - பாதி
தேங்காய் துருவல் - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் (நிறைய)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவெப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும்.
குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன்,
ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.
கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.