புதினா காரமும் மிகவும் மணமும் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும். வயிற்று போக்குக்கு நல்ல மருந்தாகவும் வாயு தொல்லையை நீக்கவும் உதவி செய்கிறது.
வயிற்று புழுக்களை நீக்க வல்லது.
பொடுகை நீக்க புதின சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து தலையில் தடவி சீயக்காய் பொடி தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
காய வைத்த இலையுடன் உப்பு சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை பல் தேய்க்க உபயோகித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வாய் துர் நாற்றத்தையும் நீக்க வல்லது.
இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை தினமும் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
இங்கு கிரீன் டீயுடன் புதினாவை சேர்த்து எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
175 ml தண்ணீர்
1 Tsp கிரீன்டீ
12 புதினா இலைகள் கழுவியது
1 Tsp இஞ்சி ஊறவைத்த தண்ணீர்
1 Tsp எலுமிச்சை சாறு
* 1/2 அங்குல இஞ்சியை கழுவி விட்டு நசுக்கி 1/4 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். மேலாக உள்ள தண்ணீரை எடுத்து உபயோகிக்கவும்.
செய்முறை :
அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
முதலில் கிரீன்டீயை சேர்க்கவும்.
புதினா இலைகளை கைகளால் கசக்கி சேர்க்கவும்.
மூடியினால் மூடி இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும்.
ஒரு டீ கோப்பையில் இஞ்சி சாறையும் எலுமிச்சை சாறையும் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் டீயை கோப்பையினுள் வடிகட்டவும்.
தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
புதினா மணம் தூக்கலான சுவையான கிரீன் டீ தயார்.
காலை வேளையில் பருகினால் புத்துணர்ச்சி தரும். சோர்வு முழுவதுமாக நீங்கி விடும்.
இனிப்பு தேவையானால் தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.