பூசணிக்காயின் மருத்துவ பயன்கள் !





பூசணிக்காயின் மருத்துவ பயன்கள் !

பூசணிக்காய் உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் உடையது, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கும் பூசணிக்காய் நல்ல மருந்து ஆகும். 
பூசணிக்காயின் மருத்துவ பயன்
மேலும், உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி பிரச்சனை தீரும்.

பூசணிக்காய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, வாந்தி, தலைசுற்றல் ஆகிய தொந்தரவு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
வெண்பூசணி காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். ரத்தக்கசிவை போக்கும், வலிப்பு நோய் நீங்கும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.

இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு, வெண் பூசணிக்காயின் சாறு 20 மில்லியளவு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்துப் பருகி வந்தால் இதயம் பலப்படும்.

பூசணிக்காயின் தோல் மற்றும் விதை பகுதிகளை நீக்கி விட்டு, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். 

நன்றாக வெந்ததும் அதன் சாற்றை எடுத்து, அதில் சிறிது அளவு கற்கண்டு சேர்த்து தினமும் 3 வேளை பருகி வர கல்லீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பாலில் 1 டீஸ்பூன் அளவு பூசணிக்காய் விதைப் பொடியைக் கலந்து குடித்து வந்தால் உடல் வலிமை பெரும். உடம்பின் எந்தப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலும் ரத்தக் கசிவை நிறுத்தி விடும்.
பூசணிக்காய் ஆஸ்துமா நோயை குணமாக்கும். சுவாச உறுப்புக்களை பலப்படுத்தும். பசி இல்லாதவர்களுக்கு நன்கு பசியை தூண்டும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பொதுவாக பூசணிக்காய் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி தொல்லைக்குச் ஒரு சிறந்த மருந்தாகும். 

பூசணிக்காயைச் சாறு எடுத்து 20 மில்லி முதல் 50 மில்லி அளவில் தேன் கலந்து ஒரு டீஸ்பூன் அளவு ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொடுத்து வந்தால் சதைப்பிடிப்பு ஏற்படுத்தி உடலை பலப்படுத்தும். 
அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
Tags: