உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும்.
உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மையை செய்கின்றனர்.
இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடைவதை வெகுவாக குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் இளமையான தோற்றமும் நமக்கு கிடைக்கிறது.
தேவையானவை
வெங்காயம் - 3
நண்டு - அரை கிலோ
தேங்காய் – 2
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் – 7
வற்றல் மிளகாய் - 5
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலைக் கிள்ளி அதன் விதைகளை நீக்கி விடவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவி மிக்ஸியில் இட்டு மூன்று முறை பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும். வதக்கிய பிறகு சிறிது தண்ணீர்
அரைத்த பச்சை மிளகாய் விழுது, துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். உருளைக்கிழங்கு அரை வேக்காடாக வெந்ததும் நண்டை சேர்த்து மூடிப் போட்டு வேக வைக்கவும்.
நண்டு வெந்ததும் இரண்டு முறை பிழிந்து எடுத்த தேங்காய் பாலை சேர்த்து மூடி வைத்துக் கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் மீதமுள்ள தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.பின்பு பரிமாறவும்