மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான அமைப்புக்கும் மிகவும் நல்லது. தோல் மற்றும் கண்களுக்கும் மாம்பழம் நல்லது.
ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. சிலருக்கு மாம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும்.
ஒவ்வொருவருக்கும் அலர்ஜிக்கான அறிகுறிகள் வேறுபடும். அதில் கண்களில் இருந்து நீர் வடிதல், மூக்கு ஒழுகல், சுவாச பிரச்சனை, அடிவயிற்று வலி, தும்மல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
இந்த மாம்பழ கேக் புட்டிங் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பால் கேக்கை செய்யலாம்.
என்னென்ன தேவை?
நல்ல தரமான நன்கு பழுத்த மாம்பழம் பெரியது - 1,
டின் பால் (மில்க்மெய்டு) - 1 கப்,
கெட்டிப் பால் - 1 கப் (முழு க்ரீம் பால்),
ரெடிமேட் வெஜிடேரியன் கேக் சதுரமாக - 6 துண்டுகள்.
அலங்கரிக்க...
பாதாம், பிஸ்தா சீவியது - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாலை சுண்டக் காய்ச்சவும். இது கெட்டியாக வரும்போது டின் பாலை சேர்த்து சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும். அந்த ஒரு மாம்பழத்தில் பாதியை அலங்கரிக்க வைக்கவும்.
மீதி பாதியை துண்டுகள் போட்டு மிக்சியில் அடித்து விழுதாக எடுத்து, இறக்கி வைத்த பால் கலவையில் சேர்த்து கலக்கவும்.
இப்போது ஒரு கண்ணாடி டிரேயில் முதலில் சிறிது
வெண்ணெய் தடவி கேக்கை சதுரமாக வெட்டி அதில் அடுக்கி, அதன் மேல் இந்த மாம்பழம், க்ரீம் பால், டின் பால் கலவையை ஊற்றவும்.
பிறகு அதன் மேல் சீவிய நட்ஸ், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து 1 மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். டின்னர் அல்லது லஞ்சுக்கு பின் பார்ட்டியில் பரிமாறலாம்.
குறிப்பு:
வீட்டில் முட்டை யில்லாத கேக்கை செய்தால் பயன்படுத்தலாம். விருப்பமான பழங்களைக் கொண்டும்
செய்யலாம்.