வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் திறன் மணத்தக்காளியிடம் உண்டு. வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான்.
இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம்.
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?
நீண்டநாள் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இதன் வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு போஷாக்கை வழங்கும்.
காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.
நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இதன் வற்றல் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும்.
வற்றலை லேசாக நெய்யில் வதக்கிய பின்பு பயன்படுத்தலாம். வாய்ப்புண் இருக்கிறதா? மணத்தக்காளி இலையைப் பிழிந்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க, வாய்ப்புண் மறையும். இதை வாய்க் கொப்பளிக்கும் நீராகவும் வாய்ப்புண் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.
தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
அப்பளம் - 4
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு
தாளித்து வத்தல் + நொறுக்கிய அப்பளம் + சாம்பார் பொடி சேர்த்து நன்கு
வதக்கவும்.
பின் உப்பு + புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
குறிப்பு :
மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து மணத்தக்காளி பருப்புக் கடைசல் சமைக்கலாம்.
வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும்.
உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம். மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு.
மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளி செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு புண்களைக் கழுவலாம்.