பெரும்பாலான மக்கள் சிக்கனை பயன்படுத்தினாலும், ஆட்டிறைச்சிக்கு தனி சுவை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால், ஆட்டிறைச்சி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது போல பல்வேறு செய்திகள் வெளியாகி, மட்டன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இதன் விளைவாக, மட்டன் பிரியர்கள் சிக்கனுக்கு மாறி வருகிறார்கள். சிலர் ஆட்டிறைச்சியில் எந்த தீங்கும் கிடையாது என்றும் கூறி வருகின்றனர். ஒரு மட்டனில் சிக்கனை விட குறைவான கலோரிகள், கொழுப்புகள் உள்ளன.
ஆனால், அதிக புரதம் உள்ளது. மட்டனில் இரும்பு மற்றும் பொட்டாசியம் ஊட்டசத்துகள் அதிகம் உள்ளன. சிக்கனை விட குறைவான சோடியம் ஊட்டசத்து உள்ளது.
கோழி இறைச்சியில் சில பகுதிகள் மட்டுமே உடலுக்கு நல்லது. பல பகுதிகளில் கொழுப்பு மட்டுமே உள்ளது. அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அதாவது, கால்கள், இறக்கைகள், தொடைகள், மார்பகப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கொழுப்புகள் அதிகம். எப்போதும் மார்பகப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பசி எடுக்காது என்று சொல்வது தவறானது. இருப்பினும் அதிகப்படியான அளவில் சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்தார்.
கோழி இறைச்சியிலும் தீங்கு கிடையாது, மார்பகப் பகுதிகளை சாப்பிடுவது நல்லது. சரி இனி சுவையான சென்னை மட்டன் தொக்கு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பன்றிக்கறி மூல நோயை குணப்படுத்தக் கூடியதா?
தேவையான பொருட்கள் :
மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 200 கிலோ
தக்காளி 200 கிலோ
இஞ்சி பூண்டு விழுது
ப. மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எலுமிச்சை சாறு
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள்
உப்பு
எண்ணெய்
சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை
செய்முறை :
குக்கரில் மட்டன், வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்,
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த மட்டனை போட்டு வதக்கவும்.
தொக்கு நன்கு சுண்டியதும் மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழியவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தூவி இறக்கவும்.