சுவையான முட்டை தோசை செய்வது எப்படி?





சுவையான முட்டை தோசை செய்வது எப்படி?

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. 
சுவையான முட்டை தோசை செய்வது எப்படி?
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் உள்ளன. 

ஒரு முட்டையைச் சரியாக வேக வைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது. 

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. 
ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. 
வீட்டில் தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு சைடு டிஷ் எதுவும் செய்து சாப்பிட பிடிக்கவில்லையா? 
அப்படியானால் உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அந்த முட்டைகளைக் கொண்டு சுவையான முறையில் முட்டை தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை தோசையை இரண்டு வெரைட்களில் செய்யலாம். 

இரண்டிற்குமே எந்த ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்கு முட்டை தோசையின் இரண்டு வெரைட்டிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? 

கீழே முட்டை தோசையின் இரண்டு வெரைட்டிகளும் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்தவாறு செய்து சாப்பிட்டு எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 4

வெங்காயம் – 1 (நறுக்கியது) 

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) 

கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது) 

தோசை மாவு – 1 

பௌல் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – தேவையான அளவு 
செய்முறை:
சுவையான முட்டை தோசை செய்வது எப்படி?
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைந்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, தோசை போல் தேய்க்க வேண்டும். 
பின்பு அதன் மேல் எண்ணெய் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை விட்டு, 2 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, தட்டில் வைக்க வேண்டும். 

பிறகு அதன் மேல் மிளகுத்தூளை தூவ வேண்டும்
Tags: