தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
உருளை கிழங்கு - 1
கேரட் - 1
ஸ்வீட் கார்ன் - 1
முட்டைகோஸ் - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீபூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
கொள்ளை நன்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கொள்ளு, உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை வேக வைத்து, கையால் மசித்துக் கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லி, கொத்தமல்லி, கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு கட்லெட்டாக சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான கொள்ளு காய்கறி கட்லெட் ரெடி.