பேரீச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பான பழம் ஆகும். அவற்றை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.
இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால் எந்த பருவத்தில் சாப்பிட்டாலும், பேரீச்சம்பழங்களை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
மணி பிளாண்ட் பசுமையாக வளர என்ன செய்ய வேண்டும்? சில டிப்ஸ் !
கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பேரிச்சம்பழம் உஷ்ணம் நிறைந்தவை. அதாவது, பேரிச்சம்பழம் உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கும்.
ஆகையால் இது வெப்பமான கோடை மாதங்களில் சிக்கலை ஏற்படுத்தும். கீல்வாதத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பேரிச்சம்பழம் பயனுள்ளதாக இருக்கும்.
உஷ்ணத்தை ஏற்படுத்தினாலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. எனவே கோடையில் அவற்றை ஏன் கைவிட வேண்டும்?
பேரிச்சம்பழம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகை நோயாளிகளுக்கு சிறந்தது.
ஆகையால் இவற்றை குறைந்த அளவில் உட்கொண்டால் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
முதலில், பேரீச்சம்பழம் சாப்பிடுவதற்கு முன், அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கவும். ஏனெனில் இது அவற்றின் உஷ்ணத்தை குறைக்க உதவும்.
கோடை காலத்தில் தினமும் 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும். பேரீச்சம்பழம் சத்தானது என்பதில் சந்தேகமில்லை.
நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு - 10
பேரீச்சம் பழம் - 5
பசும் பால் - 1 கப்
தேங்காய்ப் பால் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை
பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும்.
பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.
சூப்பரான சத்தான பேரிச்சம்பழ பானம் ரெடி.