பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சிகள் ஆரோக்கியமானவை என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய உணவு முறைகள் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதாவது சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது அதில் heterocyclic amines (HCAs) எனப்படும் கார்சினோஜன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும் என்கின்றனர்.
பார்பிகியூ தயார் செய்யும் போது உருவாகும் இரண்டு இரசாயனங்கள் HCA-க்கள் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோ கார்பன்கள் (PAHs) ஆகியவை DNA-வை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.
நீங்கள் எவ்வளவு நேரம் இறைச்சியை கிரில் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக HCAக்கள் மற்றும் PAH-க்கள் உருவாகின்றன. இதனால் மரபணு நோய்கள் ஏற்பட வாய்ய்புகள் அதிகம்.
மேலும், உங்கள் உடலில் வயதான செயல்முறையை துரிதப்படுத்தலாம். அதிக நேரம் சமைத்த உணவை மீண்டும் சமைத்து உண்பதால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது.
உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளாத பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்த சுடப்பட்ட இறைச்சிகளில் உள்ள அதிக நிறைவுற்ற கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
தேவையானவை :
கோழிக்கால் - அரைக்கிலோ
ஸ்பிரிங்க் ஆனியன் – ஒரு கட்டு
வெங்காயம் – ஒன்று
டொமெட்டோ பியூரி – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி
மிளகு தூள் – அரை மேசைக்கரண்டி
பார்பிக்யூ மசாலா – அரை தேக்கரண்டி
எலுமிச்சை – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
தயிர் – ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் – கால் மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க
செய்முறை :
தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்பிரிங்க் ஆனியன், வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கோழிக்காலை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு,
டொமெட்டோ ப்யூரி மற்ற மசாலா தூள்கள் அனைத்தையும் கலந்து சிக்கனில் தடவி ஆங்காங்கே கத்தியால் கீறி விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் ஊற வைத்த கோழி கால்களை வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.