சிக்கன் உப்புக்கறி செய்வது எப்படி?





சிக்கன் உப்புக்கறி செய்வது எப்படி?

அசைவம் பலருக்கும் பிடிக்கும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம். 
சிக்கன் உப்புக்கறி செய்வது எப்படி?
இதில் செட்டிநாடு ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். சிக்கனை எப்படி செய்து கொடுத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதிலும் தற்போதைய காலத்தில் சிக்கனை கொண்டு விதவிதமாக புதிய உணவுகளை செய்து அசத்தி வருகிறார்கள்.

சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 

கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். 

அதே போல, சிக்கன் குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது.

ஆனால் சிக்கனை கொண்டு செய்யப்படும் பல பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியானது கோழி உப்புக்கறி ஆகும். 

மிளகாய் தூள் சேர்க்காமல் காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு தூள் சேர்த்து பாரம்பரியமான முறையில் எவ்வாறு காரசாரமான கோழி உப்புக்கறி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ

எண்ணெய் - தேவையான அளவு

சோம்பு - 1 ஸ்பூன்

வெங்காயம் - 4

காய்ந்த மிளகாய் - 10

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மிளகு தூள் - 1 ஸ்பூன்

புதினா - ஒரு கைப்பிடி

கொத்த மல்லி - தேவைக்கேற்ப

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கன் உப்புக்கறி
கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுக ளாக வெட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்து 

பின்னர் நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த சிக்கன் போட்டு வதக்கவும். 

அடுத்து அதில் சீரகம், மிளகு தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும் வரை மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறியில் புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சிக்கன் உப்பு கறி ரெடி.
Tags: