வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும்.
வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து விடும்.
சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும்.
மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும்.
வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1
கோதுமை மாவு - 1 கப்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போ சூடான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேத்தபடி சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுங்க.