பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு.
அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம்.
முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக் கூடியவை. ஒரு முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச் சத்துக்களையும் பெற நீங்கள் ஒரு முழு முட்டையைச் சாப்பிட வேண்டும்.
இதைப் பற்றி உணவியல் நிபுணர் ஸ்ரேயா குப்தா கூறுகையில், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் வேக வைத்த முட்டையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் (வேக வைத்த முட்டைகளைச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கிறது).
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்: சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது.
எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. எடை அதிகரிப்பு: ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தேவையான பொருட்கள் :
முட்டை – 3
தக்காளி கெட்ச்அப் (tomato ketchup)- 1 டீஸ்பூன்
தக்காளி சில்லி சாஸ் (tomato chili sauce) – 1 தேக்கரண்டி
புளி சாறு – 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
வறுத்த சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
பச்சை மிளகாய் – 1
சாட் மசாலா – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
பூந்தி – சிறிதளவு
செய்முறை :
முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி கெட்ச்அப், தக்காளி சில்லி சாஸ், புளி சாறு, எலுமிச்சை சாறு, வறுத்த சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு தட்டில் மீது வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள சாஸை எல்லா இடங்களிலும் படும்படியாக ஊற்றவும்.
கடைசியாக அதன் மேல் வெங்காயத்தாள், பூந்தி, சாட் மசாலா தூவி பரிமாறவும்.
சுவையான முட்டை சாட் ரெடி