இஞ்சி பாலக் ஆம்லெட் செய்வது எப்படி?





இஞ்சி பாலக் ஆம்லெட் செய்வது எப்படி?

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.

இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும். 

பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம், பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

தேவையான பொருட்கள்
முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை
இஞ்சி பாலக் ஆம்லெட் செய்வது
பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும். 
மிளகு தூள், போதுமான உப்பு கலந்து தவாவில் போட்டு எடுக்கவும். தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

குறிப்பு :

உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவுதான் முட்டை. பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் உணவுதான் இந்த முட்டை. இந்த முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? 

ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் வரை சாப்பிடலாம்? ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. 

ஆனால், இந்த வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 10 சதவீதம் மட்டுமே புரதம் இருக்கிறது. கொழுப்பும் சுத்தமாக இல்லை. கார்போ ஹைட்ரேட் சத்தும் மிகக்குறைவு. 

கார்போ ஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம் உள்ளன. இதைத்தவிர, செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 போன்ற 10 வகையான வைட்டமின்கள் இருக்கின்றன. 
இதைத்தவிர, கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஆனால், மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. வைட்டமின் டி உள்ளது. 
இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு தரக்கூடியது. இந்த மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்ச கொழுப்பால், ஹார்ட் அட்டாக் வரும் என்றார்கள். 

ஆனால், அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், ஆபத்து எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். 

அது மட்டுமல்ல, வாரம் 6 முட்டைகளை சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில் தான் இருக்கும் என்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
Tags: