இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு.
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம்.
ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான்.
ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது.
அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேவையான பொருட்கள்:
6 தோலும், எலும்பும் நீக்கிய கோழியின் பாதி மார்பக பகுதி
1 (20 அவுன்ஸ்) ஜாடி சல்சா
1 பெரிய சிவப்பு மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளுங்கள்,
2 தேக்கரண்டி சீரகம்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி மிளகாய் தூள்
3 பல் பூண்டு நசுக்கியது
2 (15 அவுன்ஸ்) கேன்கள் கருப்பு பீன்ஸ்-யை கழுவிய பின் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்
செய்முறை:
400 டிகிரி பாரன்ஹீட் (205 டிகிரி செ) வெப்ப நிலையில் நுண்ணலை (மைக்ரோ வேவ்) அடுப்பை வைத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு 3 பைண்டு அளவு உள்ள க்யாஸரோல் தட்டு அல்லது ஒரு 9×13 அங்குல பேக்கிங் தட்டில் கோழிகறி துண்டுகளை அடுக்கி வைத்த பின்
ஒரு கிண்ணத்தில் சல்சா மற்றும் நறுக்கிய சிவப்பு மிளகாய், சீரக தூள், எலுமிச்சை சாறு, பூண்டு இவற்ராஇ ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கலந்த கலவையை கோழிகறி மீது ஊற்றவும். பிறகு அதன் மீது கருப்பு பீன்ஸ் கொண்டு கறி முழுவதும் தூவி விட்டு 1 அல்லது 1 1/2 மணி நேரம் வரை
மைக்ரோ வேவ் அடுப்பில் வைத்து வேக விடுங்கள். விருப்பபட்டால் இதனை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்