தேவையான பொருட்கள்
சதையுடன் நல்லி எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - அரை கப்
இஞ்சி- சிறிய துண்டு
நெய் - 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பிரியாணி இலை- 2
மிளகு - 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை- 2
ஜாதிக்காய்- 1
அன்னாசி பூ- 1
கிராம்பு- 2
ஏலக்காய் - 4
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
மிளகாய் - 5
இஞ்சி பேஸ்ட்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
சதையுடன் நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நல்லி எலும்பை போட்டு அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து விசில் விட்டு வேக வைக்கவும்
அடுத்து வாணலியில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, மிளகாய் வத்தல் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து வேக வைத்த நல்லியை சேர்த்து அரைத்த மசாலா தூள், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் நல்லி நிஹாரி ரெடி.